Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் சுகாதாரச் சீர்கேடாக இயங்கிவந்த உணவகம் ஒன்று, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (09) மாலை சீல் வைத்து மூடப்பட்டது.
பூநகரிப் பிரதேச பொதுச்சுகாதார அதிகாரி, கடந்த வாரம் சோதனை மேற்கொண்டபோது இந்த உணவகம் சுகாதாரச் சீர்கேடாக இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பூநகரிப் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரி குறித்த உணவகத்துக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .