Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனது வாகனத்தில் சென்றார்.
அத்துடன், அவரது வாகனம், குறித்த வீதித் தடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டும் இருந்தது.
இதேவேளை, ஆலய மகோற்சவ திருவிழாக்கள் ஆரம்பமாக முன்னர் திருவிழா ஏற்பாடுகள், நடைமுறைகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் வாகீசன் தலைமையில், யாழ் மாநகர சபையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கடந்த வருடங்களில் நடைபெற்ற திருவிழாக்காலத்தில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆலய நடைமுறைகளை மீறி வீதித் தடைகளைத் தாண்டி ஆலயத்துக்கு வாகனத்தில் சென்ற சம்பவங்களை ஊடகவியலாளர்களால் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்கு பதிலளித்த ஆணையாளர் இம்முறை அவ்வாறு நடைபெறாது எனவும், நடைமுறைகள் அனைவருக்கும் பொதுவானதே எனத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .