2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு?

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய Samsung Galaxy Note 7க்கு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கிராக்கி ஏற்பட்டதைத் தொடர்ந்து பூகோள ரீதியில் Samsung Galaxy Note 7க்கு தட்டுப்பாடு நிலவுவதாக தென்கொரிய தொழில்நுட்ப ஜாம்பவான் சம்சுங் நேற்றுப் புதன்கிழமை (24) தெரிவித்துள்ளது. இது, புதிய Samsung Galaxy Note 7 அமோகமாக ஆரம்பத்தில் விற்பனையாகியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

இதேவேளை, Samsung Galaxy Note 7க்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி காரணமாக இன்னொரு உறுதியான காலாண்டு வருமானங்களை சம்சுங் பெற்றுக் கொள்ள முடியுமென்றபோதும், விநியோகத்தை அதிகரிக்கா விட்டால் விற்பனைகளைத் தவறவிடும் அபயாத்தையும் எதிர்நோக்கியுள்ளது. போட்டி நிறுவனமான அப்பிள், எதிர்வரும் மாதத்தில் புதிய திறன்பேசிகளை வெளியிடவுள்ள நிலையில், விநியோகக் குறைபாடு தொடர்ந்தும் காணப்பட்டால், வாடிக்கையாளர்கள் சம்சுங்கை விட்டு வெளியேறிச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Samsung Galaxy Note 7க்கான முற்பதிவுகள், தமது எதிர்பார்ப்புகளை மீறியதால், Samsung Galaxy Note 7இன் வெளியீட்டுத் திகதி சில சந்தைகளில் மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் சம்சுங் தெரிவித்தபோதும், எங்கு வெளியீட்டுத் தாமதங்கள் இடம்பெறும் என்று தெரிவித்திருக்கவில்லை.

Galaxy S6 edge திறன்பேசிகளுக்கான வளைந்த திரைகளை தயாரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகளில், கடந்த வருடம் விற்பனைகள் பாதிப்படைந்திருந்த நிலையில், Note 7க்கான கேள்வியை சம்சுங் விரைவில் அடையாவிட்டால், மீண்டும் அவ்வாறானதொரு வீழ்ச்சி ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள சம்சுங், Noteகள் தயாரிக்கப்படும் இரகசிய நிலையங்களில் தயாரிப்பை அதிகரிக்க முயற்சி செய்து, இயலுமான வரையில் வேகமாக கேள்வியை அடைய முயற்சிப்பதாக கூறியுள்ளது.

கடந்த வருடம், ஒன்பது மில்லியன் Galaxy Note 5 திறன்பேசிகளை விற்றிருந்த சம்சுங், இவ்வருடம், 15 மில்லியன், Galaxy Note 7 திறன்பேசிகளை விற்க எதிர்பார்க்கின்றது. ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த 19ஆம் திகதி Galaxy Note 7 விற்பனைக்கு வந்திருந்தது, இதன் விலை 882 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .