2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஊவாவில் சிறுநோயாளர்களின் எண்ணிக்கை 1,183ஐ தாண்டியது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'ஊவா மாகாணத்தில்  சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை  1,183ஐ தாண்டியுள்ளது. இவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குதலும், நோய்த் தடுப்புச் செயற்பாடுகளை வலுவூட்டுதலும் அத்தியாவசியமாகியுள்ளது' என ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன் உயர்இரத்த அழுத்தம், நீரழிவு போன்ற தொற்றாத நோய்கள் வேகமாக இச்சமூகத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  ஊவா மாகாணசபை அமர்வு, மாகாண சபை மண்டபத்தில், புதன்கிழமை (24) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

'மாகாண அபிவிருத்தியில் மக்களின் சுகாதார நலனும் மிக முக்கியமானது. அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் போது, சுற்றாடலுக்கு உகந்தவகையிலான அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  விசேடமாக, மாகாணத்தின் வளமிக்க காணிகளை பாதுகாத்துக்கொள்ள உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல்  வேண்டும்.   

இப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். அதேபோன்று, நீரூற்றுப் பிரதேசங்கள், நீரேந்துப் பிரதேசங்களை பாதுகாப்பதுடன், அவற்றை முறையாகவும், கிரமமாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இம்மாகாணத்தில், 33 சதவீதமானோர் தற்காலிக வீடுகளிலேயே வசிக்கின்றனர். இம்மக்களின் வீடுகளை அபிவிருத்தி செய்துகொள்வதற்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்கும் திட்டமொன்றை, ஊவா மாகாண சபைமேற்கொண்டு வருகின்றது' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .