2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 26

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1768: கெப்டன் ஜேம்ஸ் குக், தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.

1795: திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1914: முதலாம் உலகப் போர் - ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.

1914: முதலாம் உலகப் போர் - ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.

1920: அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.

1942: உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.

1957: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் வெற்றிகரமாக பரிசோதித்ததாக சோவியத் யூனியனின் டாஸ் செய்திச்சேவை அறிவித்தது.

1978: முதலாம் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டார்.

1993: யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

1997: அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

2003: அமெரிக்காவின் கொலம்பிய விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.

2006: திருகோணமலை, மூதூர் கிழக்கில் விமானக் குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

2008: ஜோர்ஜியா நாட்டிலிருந்து பிரிந்த குடியரசுகளான அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேஷியாவின் சுதந்திரப் பிரகடனங்களை ரஷ்யா  அங்கீகரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .