2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோட்டத் தொழிலாளர்களுக்காக புத்தம்புது நடைமுறை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

தோட்டத்தொழிலாளர்களின் நலன் கருதி, எதிர்காலத்தில் சகல தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகளுக்கு இடையிலான புதிய நடைமுறையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஹட்டன் விஜித்தா மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (28), நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர், மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், 'நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விட, மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் ஒரே மாவட்டம், நுவரெலியா மாவட்டமேயாகும். அந்தவகையில், நுவரெலியாவின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்காகவே, மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சை திகாம்பரத்துக்கும் கிராமத்தை அபிவிருத்தி செய்யும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சை நவீனுக்கும், கல்வியை மேம்படுத்துவதற்கான அமைச்சை இராதாகிருஷ்ணனுக்கும் வழங்கினேன். அதுபோல, மலையகத்தின் பிரதான நகரங்களான நுவரெலியா, ஹட்டன், மஸ்கெலியா ஆகிய நகரங்களையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்' என்றார்.

'நாட்டையும் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய தேவை, தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவேதான், ஐக்கிய தேசியக் கட்சியை ஸ்திரப்படுத்தும் அங்கத்தவர் இணைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிற்றுறையை மேம்படுத்தவே, கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கினோம். அவர்களில் சிலர், இலாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். மாறாக, தொழிலாளர்களின் அபிவிருத்தியில், அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. ஆகவே, எதிர்காலத்தில் சகல தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகளுக்கும் இடையிலான புதிய நடைமுறையொன்றைக் கொண்டுவரவுள்ளேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .