2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் பெண் காயம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டனிலிருந்து குடாகம நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சகரவண்டியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஹட்டனிலிருந்து சென்ற முச்சக்கரவண்டியின் சாரதி கைபேசியில் உரையாடிக்கொண்டு சென்றபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டியை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .