2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செல்லாக்காசுகளின் செயற்பாடு அம்பலம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

எமக்கு எதிராக தொழிற்படும் சிலர், கண்டி மாவட்டத்தில் மூலைமுடுக்குகளில் போய் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அந்தளவுக்கு அவர்களுடைய செல்வாக்கு குறைந்துள்ளதை அவர்களின் செயற்பாடுகளினூடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது' என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டி - மலபார் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சிலர் தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக தற்போது அரசியலில் பிரவேசித்து தங்களை கதாநாயகர்களாக காட்ட முற்படுகின்றனர். ஆனால், அரசியல் என்பது பொதுமக்கள் சார்ந்த தொழிற்பாடாக இருக்க வேண்டும் என்றார்.

எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65ஆவது வருடாந்த மாநாட்டுக்கு இலட்சோப இலட்சம் கட்சி அங்கத்தவர்கள் ஒன்று சேர்வதுடன், கண்டி மாவட்டத்தில் இருந்து பாரிய அளவில் அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது வரைக்கும் இ.போ.ச.பஸ்களை மட்டுமே கேட்டிருந்த போதும், அங்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக தனியார் பஸ்களையும் வாடகைக்கு எடுக்கவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .