2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநாடு செல்ல இருவருக்கு அனுமதி

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம், இன்றுச் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

அனுமதி பத்திரங்கள் இன்றி, யானைக்குட்டியொன்றை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த உடுவே தம்மாலோக்க தேரர், லண்டனில் இடம்பெறும் பௌத்த வழிபாடுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை தருமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு, சொத்துக்கள் தொடர்பிலான ஆவணங்களை கையளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை, அடுத்த வழக்குத் தவணையான செப்டெம்பர் 09ஆம் திகதி வரையிலும் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .