2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமாதான பாத யாத்திரை புத்தளம் நகரை வந்தடைந்தது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

இலங்கை மனித உரிமைகள் இயக்கம் யாழ்ப்பாணம் நல்லூரில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்த சமாதான பாத யாத்திரை நேற்றுத் திங்கட்கிழமை (29) இரவு, புத்தளம் நகரை வந்தடைந்தது.

இரவு 06.30 அளவில் புத்தளம் - அநுராதபுர வீதி இராணுவ பயிற்சி முகாமுக்கு அருகில் வருகை தந்த  இலங்கை மனித உரிமைகள் இயக்க நிர்வாக பணிப்பாளர் ஜயந்த கலுபோவில தலைமையிலான குழுவினரை, இலங்கை மனித உரிமைகள் இயக்க புத்தளம் நகர தலைவர் பீ. மொஹிதீன் பிச்சை, அதன் பணிப்பாளர்களான டொக்டர் ஏ.எச்.எம். நாளிர், கலாநிதி எஸ்.ஆர்.எம். சராபத்துல்லாஹ், புலனாய்வு அதிகாரிகளான எச்.எம். ஹாபிஸ், ப்ரதீபன், ஏ.என்.எம். நவீத் ஆகியோர் வரவேற்றனர்.

பெரிய பள்ளி பரிபாலன சபை தலைவர் பீ.எம். ஜனாப் தலைமையிலான நிர்வாக உறுப்பினர்கள் இவர்களை வரவேற்றதோடு பள்ளியில் விஷேட பிரார்த்தனை கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. செயலாளர் ஜே.இசட்.எம்.நாசிக் வரவேற்புரை நிகழ்த்த, கிராம சேவையாளர் அலி சப்ரி விஷேட உரையும் நிகழ்த்தினார்.

புத்தளம் காசிஸிமிய்யா அரபுக்கல்லூரி அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட மற்றும் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .