2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழ்;ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்ப உறவுகள், கிராமிய பெண்கள் அமைப்புகள், கிராமிய சமூக அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியன இணைந்து இதனை நடத்தின.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரையில் நடைபெற்றது. பேரணியில் முடிவில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் செய்யிட் ராட் அல் ஹுசைன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா. பணிக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றுக்கு இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .