Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனி தேசிய கால்பந்தாட்ட அணியின் உணர்ச்சிபூர்வமான தலைவரான பஸ்டியான் ஸ்வாஞ்டைகர், வெற்றியுடன் சர்வதேசக் கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்.
ஜேர்மனி, பின்லாந்து அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியே, 32 வயதான ஸ்வாஞ்டைகரரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்த நிலையி, இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போது ஸ்வாஞ்டைகர் அழுதிருந்தார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் மத்தியகள வீரராகவிருக்கும் ஸ்வாஞ்டைகர், 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். அது முதல் 121 போட்டிகளில் ஜேர்மனிக்காக பங்குகொண்டு 24 கோல்களை ஸ்வாஞ்டைகர் பெற்றார்.
போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மாற்று வீரரால் மாற்றப்பட்ட ஸ்வாஞ்டைகருக்கு, அரங்கமே எழுந்து நின்று மரியாதை அளித்திருந்தது. இப்போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றிருந்தது.
2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற ஜேர்மனி அணியில் இடம்பெற்றிருந்த ஸ்வாஞ்டைகர், ஜேர்மனி சார்பாக அதிக போட்டிகளில் விளையாடிய நான்காவது வீரராக ஓய்வு பெறுகிறார். தவிர, ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகள் 18இல் பங்குகொண்டு, அத்தொடரில் அதிக போட்டிகளில் பங்குபற்றிய ஜேர்மனிய வீரராக விளங்குகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .