2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்காவில் வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் கட்டாயம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகளையும் கறுப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவரல்லாத ஏனையோரும் பின்தங்கியுள்ளமையை நிவர்த்தி செய்யுமுகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில், வெள்ளையரல்லாதவர்கள் 6 பேர் இடம்பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் நிர்வாக சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு காரணமாக, நிற ஒதுக்கீடென்பது, உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது.

இதில், வெள்ளையரல்லாத 6 பேரில் குறைந்தது இரண்டு பேர், நிச்சயமாக கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டுமெனவும், ஏனையோர், நிறப்பிரிவினராக இருக்க முடியுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த ஒதுக்கீடு, ஒவ்வொரு போட்டிக்குமெனக் கட்டாயமானதாக இருக்காது. மாறாக, பருவகாலமொன்றுக்குச் சராசரியாக, ஒரு போட்டியில் வெள்ளையரல்லாத 6 பேர் விளையாடியிருக்க வேண்டும். எனவே, ஒரு போட்டியில் அவ்வாறான 4 பேர் விளையாடினால், மற்றொரு போட்டியில் 8 பேர் விளையாடுவதன் மூலமாக, சராசரியான 6 பேர் என்பதை அடைந்து கொள்ள முடியும்.

தென்னாபிரிக்காவில் வெள்ளையினத்தவர்கள் 21.6 சதவீதம் மாத்திரமே காணப்படுகின்ற போதிலும், அந்நாட்டின் கிரிக்கெட் அணியில், வெள்ளையினத்தவர்களே பெரும்பான்மையாக விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X