கோடு தாண்டினால் கோட்?
05-09-2016 05:15 PM
Comments - 0       Views - 319

எல்லைக்கோட்டைத் தாண்டி காரின் நிழல் படும்படியாகக் கார் ஓட்டிய நபருக்கு, அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், ரஷ்யத் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஓட்டுநர், தனது காரில், அண்மையில் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவரது காரானது, வீதிக்கு நெடுகே இருந்த கோட்டுக்கு அருகே பயணித்துள்ளது. எனினும், அவரது கார், அக்கோட்டைத் தாண்டவில்லை. ஆனால், அக்காரின் நிழல் அக்கோட்டைத் தாண்டி விழுந்துள்ளது.

இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி பாதுப்புக் கமெராவில் போக்குவரத்து விதி மீறல் எனும் தன்னியக்க அபராதம் விதிக்கும் படி கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

'வாகனத்தின் நிழல் தாண்டினாலேயே அபராதம் விதிக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்று, பாதிக்கப்பட்ட அந்த ஓட்டுநர், தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், அபராதத் தொகையைச் செலுத்துமாறு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் அப் பதிவில் அவர் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"கோடு தாண்டினால் கோட்?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty