2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பியனானது தில்லையடி வின் ஸ்டார்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தில்லையடியில் நடைபெற்ற டில்ஷான் வெற்றிக்கிண்ணத்துக்கான கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற தில்லையடி வின் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கழகம், தொடரின் சம்பியனாகியுள்ளதோடு, இரண்டாம் இடத்தை, தில்லையடி யூத் ஸ்டார் அணி பெற்றுக்கொண்டது.

தில்லையடி கிரிக்கெட் லீக் ஏற்பாடு செய்த இந்த போட்டி தொடருக்கு, லீக் தலைவர் முஹம்மத் டில்ஷான் பூரண அனுசரணை வழங்கி இருந்தார். லீக்குக்கு கட்டுப்பட்ட 10 கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையிலான இந்த போட்டி தொடர் கடந்த இரு மாதங்களாக  நடைபெற்று தற்போது இறுதி போட்டி நிறைவடைந்துள்ளது.

10 ஓவர்களை கொண்ட இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வின் ஸ்டார்ஸ் அணி 8 விக்கட் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 82 ஓட்ட இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யூத் ஸ்டார் அணியானது 5 விக்கட் இழப்பில் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால் 21 ஓட்டங்களால் வின் ஸ்டார்ஸ் கழகம் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது.

தொடர் நாயகனாக யூத் ஸ்டார்ஸ் அணியின் வீரர் எம். பர்மானும், சிறந்த பந்து வீச்சாளராக இலவன் ஸ்டார் அணியின் எம்.சகீயும், ஆட்ட நாயகனாக வின் ஸ்டார் அணியின் சுஹைலும் தெரிவாகினர். நடுவர்களாக சசீகரன் மற்றும்  முஜாகித்  ஆகியோர் கடமையாற்றினர். இத்தொடரின் மூன்றாம் நான்காம் இடங்களை முறையே இலவன் ஸ்டார்ஸ் அணியும், சன் ரைஸ் அணியும் பெற்றுக்கொண்டன.

இந்த இறுதி போட்டி நிகழ்வில் அதிதிகளாக ஐ.தே. கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஓ. அலிகான், ஐ.தே. கட்சியின் புத்தளம் மாவட்ட மேலதிக இணைப்பு செயலாளரும், மேலதிக முகாமையாளருமான மொஹிதீன் பிச்சை, புத்தளம் நகர சபையின்  நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், தில்லையடி கிரிக்கெட் லீக் தலைவர் எம்.டில்ஷான், தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .