2026 ஜனவரி 03, சனிக்கிழமை

'தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்' என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, 'தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில் பூர்த்திசெய்யப்படாத பட்சத்தில் எவ்வாறு தேர்தலொன்றினை நடத்துவது? தேர்தலைச் சுதந்திரமானதும் நேர்மையானதுமான முறையில் நடத்துவதற்கே, தேர்தல்கள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளது. வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் கண்டியில், 40 சதவீதமானவை நிறைவடைந்துள்ளன. கொழும்பில் வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கை முடிந்துவிட்டது.

ஆனால், மீள் பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் யாழ்ப்பாணத்திலும் வாக்காளர் கணக்கெடுப்பானது முடிவடைந்துள்ள நிலையில், மீள்பரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மாதம் 15ஆம் திகதிக்குள் இப்பணிகள் நிறைவடையும், 2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில், இம்முறை 15.69 மில்லியன் மக்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், 8,000 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாட்டு விண்ணப்பங்கள், தங்களது பெயர் இடாப்புக்களில் உட்சேர்க்கப்படவில்லை என்பதற்கான உரிமையைக் கோரிகைக்கான படிவம் அனுப்பப்பட்டுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X