George / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை புதிய பிரதேச செயலகத்துக்கு கட்டடம் அமைப்பதற்காக அத்திபாரம் தோண்டிய போது, பல வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிகள் 137, ரிவோல்வர் 6இன் பாகங்கள் உள்ளிட்ட இன்னும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
துருபிடித்த நிலையில் காணப்பட்ட இந்த ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளை மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.பீ.எச்.எம்.ஷேசிறி ஹேரத, பார்வையிட்டார்.
குறித்த ஆயுதங்கள் அங்கு எப்படி அங்கு புதைக்கப்பட்டன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1971 ஆம் ஆண்டு ஏப்ரல் கலகம் மற்றும் 1988ஃ1989 ஆண்டுகளில் இரண்டாவது கலகம் என்பன மாத்தளை மாவட்டத்தில் ஏற்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலை பூமியில் இருந்து, பல வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .