Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும்.
எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நால்வர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பரிஸில், கடந்த நவம்பர் 13ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ், அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் வீட்டுக் காவலில் இருந்ததாக, தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. எவ்வாறெனினும் குறித்த சிறுவன் ஏன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான் எனத் தெரிவிக்கவில்லை.
இச்சமயத்திலேயே, பரிஸின் பொது இடத்தில் தாக்குதலொன்றை நடாத்தத் திட்டமிட்டதைத் தொடர்ந்தே குறிரித்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக தகவல் மூலாமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்தேகத்துக்கிடமான, பிரெஞ் இஸ்லாமிய ஆயுததாரியான ரஷீட் காஸிமுடன் குறித்த சிறுவன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்த மற்றொரு தகவல் மூலம், பரிஸிலுள்ள ரயில் நிலையத்தில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு, கைது செய்யப்பட்ட பெண்ணொருவரையும் காஸிம் வழி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிரியாவிலுள்ள காஸிம், டெலிகிராமை பயன்படுத்தி, பிரான்ஸில் தாக்குதல்களை நடாத்துமாறு கோரிக்கை விடுத்ததாக பிரெஞ்சுப் பத்திரிகையான லீ மொன்டே தெரிவித்திருந்தது. பெண்கள், சகோதரிகள் தாக்குதல் நடத்துகிறார்கள், எங்கே சகோதரர்கள்? அவள் கத்தியால் பொலிஸ் அதிகாரியை தாக்குகிறாள், எங்கே ஆண்கள் என டெலிகிராமில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்ட பெண்ணொருவர், கைது செய்யப்படும்போது, பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்தியநிலையில், சுடப்பாட்டு காயப்படுத்தப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .