2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

மோர்கன் வெளியேறினார்: தலைவராக ஜொஸ் பட்லர்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் தலைவர் ஒய்ன் மோர்கனும், இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக, பங்களாதேஷுக்குச் செல்லவுள்ளது. இத்தொடர், ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

எனினும், பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இத்தொடரில் இணைவதிலிருந்து விலகுவதாக, மோர்கனும் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் திருப்தியடைவதாக, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கிய போதிலும், இத்தொடரில் பங்குபற்றுவதற்காக எவரையும் வற்புறுத்தப் போவதில்லையெனவும் எவரும் விலகலாமெனவும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் தெரிவித்திருந்தார். எனினும், இத்தொடரிலிருந்து அவர்கள் விலகியமை குறித்து ஏமாற்றமடைவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

மோர்கனுக்குப் பதிலாக, அணியின் உப தலைவரான ஜொஸ் பட்லர், இத்தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X