2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான், இங்கிலாந்து ஒ.நா.ச.போட்டித் தொடர் மீள்பார்வை

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 4-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி மிக அபாரமாக விளையாடி டெஸ்ட் தொடரை சமன் செய்த போதும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயற்பட முடியவில்லை. இந்தத் தொடரில் மாத்திரமல்ல அண்மைக்காலமாகவே பாகிஸ்தான் அணிக்கு இதே நிலைதான். டெஸ்ட் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. அதனால்தான் முதற் தடவையாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளனர். ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி.

பொதுவாக இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் தான் மிகச் சிறந்த அணியாக இருக்கும். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சராசரி அணியாகவே இருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. அவர்களின் துடுப்பாட்டம் சிறப்பாக அதிரடியாகவுள்ளது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு அண்மைக்காலமாக ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகவே உள்ளது. பாகிஸ்தான் அணியின் மோசமான பந்து வீச்சு , இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்டம் இதுவே இந்த தொடரின் வித்தியாசம். இதன் மூலமே இந்த தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக வெற்றிகளை தனத்தாக்கியது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை. அணியின் தலைவராக அஸார் அலி இன்னும் தொடர்கிறார். 2015ஆம் ஆண்டு நேரடியாக அணித்தலைவராக அணிக்குள் வந்தார். பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் சதமடித்து தன்னுடைய துடுப்பாட்ட திறமையை காட்டிய போதும் 2015ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் இன்னமும் ஒரு சதமும் அடிக்கவில்லை. இவர் ஒரு சராசரி துடுப்பாட்ட வீரர். வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்ககூடிய துடுப்பாட்டம் இருப்பதாக தெரியவில்லை. தலைமைப் பொறுப்பும் அவ்வாறே உள்ளது. 25 போட்டிகளில் 9 வெற்றிகள் 15 தோல்விகள். 9 வெற்றிகளில் 3 போட்டிகள் சிம்பாவே அணியுடனும், 1 போட்டி அயர்லாந்து அணியுடனும் பெறப்பட்டவை.  இதன் பின்னரும் ஏன் இவரை  அணியின் தலைவராக பாகிஸ்தான் அணி நீடிக்கின்றது என்பது தெரியவில்லை.

அனுபவமற்ற புதிய துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு பின்னடைவை தருகின்றனர். அனுபவம் வாய்ந்த மொஹமட் ஹபீஸ் இந்த தொடரில் சிறப்பாக செயற்படவில்லை. இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடினார். ஷப்ராஸ் அஹமட் கூடிய ஓட்டங்களைப் பெற்றவர். மத்திய வரிசையில் கைகொடுத்தார். பின்வரிசையில் இமாட் வஸீம் ஓட்டங்களை பெற்றமையும் ஓரிரு வீரர்களின் ஓட்டங்களும் சராசரியான ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு பெற்றுக் கொடுத்தது. பந்துவீச்சில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மொஹமட் ஆமிர் முழுமையாக ஏமாற்றினார். ஹஸன் அலி 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இமாட் வஸீம், ஆமிர் ஆகியோர் 4 போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகள். ஆக இதுதான் பாக்கிஸ்தான் அணியின் பந்து வீச்சா என்ற நிலையாகி போனது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்ட வீரர்கள் சுழற்சி முறையில் கை கொடுத்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ், ஒய்ன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜேஸன் றோய் என முன் வரிசை வீரர்கள் ஓட்டங்களை தேவையான நேரங்களில் பெற்றனர். அதன் காரணமாகவே ஓட்டங்களை அதிகம் பெற முடிந்தது. அதையே வெற்றியாக மாற்றவும் முடிந்தது. பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீட்ஆகியோரின் பந்து வீச்சு பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் எவ்வாறு எல்லோரும் இணைந்து சிறப்பாக செயற்பட்டனரோ அதே போன்றே பந்து வீச்சிலும் இணைந்து செயற்பட்டு வெற்றிகளை தாமதாக்கியுள்ளனர். ஆக இங்கிலாந்து அணி ஒட்டு மொத்தமாக ஒரு அணியாக சிறப்பாக செயற்பட்டமையே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அணி சிறப்பாக சமநிலையாக உள்ளது. சொந்த மைதானம். எதிரணி போதுமான பலமாக இல்லை. இந்த நிலையில் தொடர் வெற்றி என்பது இலகுவானதே.

போட்டிகளின் முடிவுகள்

 

முதற் போட்டி  -  இங்கிலாந்து அணி டக் வேர்த்லூயிஸ் முறைப்படி 44 ஓட்டங்களினால் வெற்றி.

பாகிஸ்தான் அணி  50 ஓவர்கள் 260/6

அஸார் அலி 82, ஷப்ராஸ் அஹமட் - 55

அடில் ரஷீட் - 51/2 (9 ஓவர்கள்)

 

இங்கிலாந்து அணி 34.3 ஓவர்களில் 194/3

ஜேஸன் றோய் - 65, ஜோ ரூட் - 61

மொஹமட் நவாஸ் - 31/1 (6.3 ஓவர்கள்) , உமர் குல் - 46/1, (6 ஓவர்கள்)

 

மழை காரணமாக போட்டி 34.3 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் நிறைவு செய்யப்பட்டது. இங்கிலாந்து அணி அந்த நிலையில் வெற்றி பெற 151 ஓட்டங்கள் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணிக் 194 ஓட்டங்களை பெற்று இருந்தது.

இரண்டாவது போட்டி - இங்கிலாந்து அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி 291/10 (49.5 ஓவர்கள்)

ஷப்ராஸ் அஹமட் - 105, இமாட் வஸீம் 63(ஆ.இ)

மார்க் வூட் 46/3 ( 10 ஓவர்கள்), கிறிஸ் வோக்ஸ் 42/3 (9.5 ஓவர்கள்)

 

இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 255/6

ஜோ ரூட் - 89, ஒய்ன் மோர்கன் - 68

இமாட் வஸீம் - 38/2 ( 7 ஓவர்கள்)

 

மூன்றாவது போட்டி - இங்கிலாந்து அணி ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் பெற்ற கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்தது. இலங்கை அணி 2006 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக பெற்ற 443 ஓட்டங்கள் என்ற சாதனையை தாண்டி 444 ஓட்டங்களை பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் வஹாப் றியாஸ் 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை வழங்கி கூடுதலான ஓட்டங்களை வழங்கியவர்களில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார். 10 ஓவர்களில் 113 ஓட்டங்களை அசுத்திரேலியா வீரர் மிக் லூயிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வாங்கியதே சாதனையாக உள்ளது. 

 

400 ஓட்டங்களை தாண்டிய அணிகளின் விபரம்

இங்கிலாந்து 444/3 எதிர்  பாகிஸ்தான்,  இங்கிலாந்து 30 ஓகஸ்ட் 2016 , # 3773

இலங்கை 443/9 எதிர் நெதர்லாந்து, நெதர்லாந்து 4 ஜூலை 2006 ,# 2390

தென்னாபிரிக்கா 439/2 எதிர் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா 18 ஜனவரி 2015 , # 3583

தென்னாபிரிக்கா 438/9 எதிர் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா 12 மார்ச் 2006 , # 2349

தென்னாபிரிக்கா 438/4 எதிர் இந்தியா,  இந்தியா 25 ஒக்டோபர்  2015 ,  # 3700

அவுஸ்திரேலியா 434/4 எதிர் தென்னாபிரிக்கா,  தென்னாபிரிக்கா 12 மார்ச் 2006 , # 2349

தென்னாபிரிக்கா 418/5 எதிர் சிம்பாப்வே, சிம்பாப்வே 20 செப்டம்பர்  2006 ,  # 2420

இந்தியா 418/5 எதிர் மேற்கிந்திய தீவுகள்,  இந்தியா 8 டிசம்பர் 2011 ,  # 3223

அவுஸ்திரேலியா 417/6 எதிர் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா 4 மார்ச் 2015 ,  # 3623

இந்தியா 414/7 எதிர் இலங்கை, இந்தியா  15 டிசம்பர் 2009 ,  # 2932

இந்தியா 413/5 எதிர் பெர்முடா,  மேற்கிந்திய தீவுகள் 19 மார்ச் 2007 ,  # 2542

இலங்கை 411/8 எதிர் இந்தியா, இந்தியா  15 டிசம்பர் 2009 ,  # 2932

தென்னாபிரிக்கா 411/4 எதிர் அயர்லாந்து, அவுஸ்திரேலியா 3 மார்ச் 2015 ,  # 3621

தென்னாபிரிக்கா 408/5 எதிர் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா 27 பெப்ரவரி 2015 ,  # 3616

இங்கிலாந்து 408/9 எதிர் நியூஸிலாந்து, இங்கிலாந்து 9 ஜூன் 2015 ,  # 3654

இந்தியா 404/5 எதிர் இலங்கை , இந்தியா 13 நவம்பர் 2014 ,  # 3544

நியூஸிலாந்து 402/2 எதிர் அயர்லாந்து,  ஸ்கொட்லாந்து  1 ஜூலை 2008 ,  # 2727

இந்தியா 401/3 எதிர் தென்னாபிரிக்கா, இந்தியா24 பெப்ரவரி 2010 ,  # 2962

 

( ஓட்டங்களை பெற்ற அணி, ஓட்டங்கள், எதிரணி, ஓட்டங்கள் பெறப்படட நாடு, திகதி, போட்டி இலக்கம்)

 

இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களினால்   வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 443/3

அலெக்ஸ் ஹேல்ஸ் 171, ஜொஸ் பட்லர் - 90(ஆ.இ), ஜோ ரூட் - 85, ஒய்ன் மோர்கன் - 57 (ஆ.இ)

ஹஸன் அலி  - 74/2 ( 10 ஓவர்கள்)

 

பாகிஸ்தான் அணி 275/10 (42.4 ஓவர்கள்)

ஷர்ஜீல் கான் 58, மொஹமட் ஆமிர் 58

கிறிஸ் வோக்ஸ் 41/4 (5.4 ஓவர்கள்)

 

நான்காவது  போட்டி - இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

 

பாகிஸ்தான் அணி 247/8 (50ஓவர்கள்)

அஸார் அலி -80, இமாட் வஸீம் - 57(ஆ.இ)

அடில் ரஷீட்  47/3 (10 ஓவர்கள்) , கிறிஸ் ஜோர்டான் 42/2 (09 ஓவர்கள்), மொயின் அலி 39/2 (10 ஓவர்கள்)

 

இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 252/6

பென் ஸ்டோக்ஸ் - 69, ஜொனி பெயர்ஸ்டோ - 61

மொஹமட் இர்பான்  - 26/2 ( 5 ஓவர்கள்)

 

ஐந்தாவது போட்டி -  பாகிஸ்தான்  அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

 

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 302/9

ஜேசன் ரோய் 87, பென் ஸ்டோக்ஸ் 75

ஹஸன் அலி  - 60/4 ( 10 ஓவர்கள்) , மொஹமட் ஆமிர் - 50/3 (10 ஓவர்கள்)

 

பாகிஸ்தான் அணி 304/6 (48.2 ஓவர்கள்)

ஷப்ராஸ் அஹமட் - 90, சொஹைப் மலிக் 77

மார்க் வூட்   56/2 (10 ஓவர்கள்) , லியாம் டோவ்சன்  70/2 (08 ஓவர்கள்)

 

 

100 ஓட்டங்களை தாண்டிய வீரர்கள்

 

ஷப்ராஸ் அஹமட்              5              5              300         105         60.00     91.74                     1              2

ஜோ ரூட்                               5              5              274         89           54.80     91.02                     0              3             

அலெக்ஸ் ஹேல்ஸ்            5              5              223         171         44.60     117.98                   1              0             

அஸார் அலி                          5              5              208         82           41.60     77.61                     0              2             

பென் ஸ்டோக்ஸ்                  5              4              201         75           67.00     102.55                   0              2             

ஜேசன் றோய்                         5              5              181         87           36.20     102.25                   0              2             

ஒய்ன் மோர்கன்                     5              5              179         68           59.66     90.86                     0              2             

இமாட் வஸீம்                         4              4              153         63*         -              102.00                   0              2

சொஹைப் மலிக்                    4              4              123         77           30.75     83.67                     0              1             

பாபர் அஸாம்                            5              5              122         40           24.40     84.72                     0              0             

ஷர்ஜீல் கான்                             5              5              100         58           20.00     133.33                   0              1             

 

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

 

கிறிஸ் வோக்ஸ்                    4              4              32.3        5              173         9              4/41       19.22     5.32       

அடில் ரஷீட்                             4              4              39.0        0              222         8              3/47       27.75     5.69       

ஹஸன் அலி                            4              4              39.0        0              239         8              4/60       29.87     6.12       

மார்க் வூட்                                  4              4              40.0        1              234         7              3/46       33.42     5.85       

லியாம் பிளங்கெட்                    4              4              35.0        0              193         5              2/50       38.60     5.51       

 

(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓவர்கள், ஓட்டமற்ற ஓவர்கள், வழங்கிய  ஓட்டங்கள், விக்கெட்கள்கூ, சிறந்த பந்து வீச்சு  , சராசரி, ஓட்ட சராசரி வேகம் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .