Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து கழகங்களான றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோல்வியைத் தளுவியது.
தற்போதைய சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான றியல் மட்ரிட், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்கள் காரணமாக றியல் மட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொராட்டா ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.
மன்செஸ்டர் சிற்றி, ஜேர்மனியக் கால்பந்தாடக் கழகமான பொரிசியா மஞ்சென்கிளட்பா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சேர்ஜியோ அக்ரோ மூன்று கோல்களையும் கெலச்சி லெஹாஞ்சோ ஒரு கோலினையும் பெற்றனர்.
லெய்செஸ்டர் சிற்றி, பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகே ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில், தனது அறிமுக சம்பியன்ஸ் லீக் போட்டியில், லெய்செஸ்டர் சிற்றி வெற்றிவாகை சூடியது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ் இரண்டு கோல்களையும் மார்க் அல்பிரைட்டன் ஒரு கோலினையும் பெற்றனர்.
இந்நிலையில், மொனாக்கோ கழகமான ஏ.எஸ் மொனாக்கோவிடம் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-1 என்ற கோல்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இது தவிர, இத்தாலியக் கழகமான ஜுவென்டஸ், ஸ்பானியக் கழகமான செவில்லா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .