Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது.
செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செல்சிக்கு ஆறுதலளித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .