George / 2016 செப்டெம்பர் 19 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர, கடுவலையில் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் செலுத்திய கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.
கண்டி -கொழும்பு பிரதான வீதியில் கடுவலை ரன்முத்துகல பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த 28 வயதுடைய இளைஞனே பலியாகியுள்ளதுடன் நுவான் குலசேகரவும் கொழும்பு நோக்கி பயணித்தபோதே அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .