2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Google Allo

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவினில் வெளியே செல்லுவதற்கு திட்டமிடுவதற்கோ அல்லது சாதாரணமாக கூடுவதற்கோ, நண்பர்கள், விருப்பமானவர்களுடன் தொடர்பிலிருப்பதுக்கு, தகவல்களை அனுப்பவதிலேயே நாம் அனைவரும் தங்கியிருக்கிறோம்.

எவ்வாறெனினும், விமானப் பயணம் பற்றி தெரிந்து கொள்வதற்கோ அல்லது புதிய உணவகமொன்றை தேடுவதற்கோ, எமது உரையாடல்களை நிறுத்திவிட்டே அவற்றைத் தேட வேண்டியுள்ளது. இந்நிலையிலேயே, கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, எமக்குத் தேவையான உதவியைத் தேவையான நேரத்துக்கு பெறுவதற்குரிய செயலியொன்றை, தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களது கலந்துரையாடல்களில், மேலும் பலவற்றைக் கூறுவதற்கும் மேலும் பலவற்றைக் செய்வதற்கும் உதவக்கூடிய Google Allo எனப்படும் புதிய தகவல் பரிமாற்ற திறன் செயலியை, அன்ட்ரொயிட், iOS இயங்குதளத்தில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google Alloவானது, திட்டங்களை தயாரிக்க உதவுவதுடன், தகவல்களை கண்டுபிடிக்க உதவுவதுடன், கலந்துரையாடல்களில், உங்களை மிகவும் இலகுவாக வெளிப்படுத்திக்கொள்ள முடியும். இதை நீங்கள் மேலும் பயன்படுத்த, அது மேலும் வளர்ச்சியடையக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது.

விரைவாக பதிலளிக்கவும் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும்போது கலந்துரையாடல்களைத் தொடருவதையும் Google Allo இலகுவாக்கிறது. Smart Replyஇன் மூலம், ஒரு தொடுகையின் மூலமே நீங்கள் பதிலளிக்க முடியும். உதாரணமாக, நீங்கள் வந்து கொண்டிருக்கின்றீர்களா என உங்களது நண்பர் வினவும்போது, நீங்கள் விரைவாக ஆம் என பதிலளிக்க முடியும். தவிர, புகைப்படங்களுக்கு பதிலளிப்பதற்கான ஆலோசனைகளையும் Smart Reply வழங்குகின்றது. செல்லப்பிராணியின் படமொன்றை உங்கள் நண்பர் உங்களுக்கு அனுப்பும்போது, அது நன்றாக உள்ளது என்றவாறான ஆலோசனைகளை Smart Reply வழங்கும். இது தவிர, காலப்போக்கில், உங்களுக்கேற்றவாறு Smart Reply மாறிக் கொள்ளும்.

இதேவேளை, Google Alloவில், நீங்கள் emojக்களை உருவாக்க முடியும் என்பதுடன், “send” பொத்தானை மேலும் கீழும் அசைப்பதன் textகளின் அளவை பெரித்தாக்கிக் கொள்ளவோ அல்லது சிறிதாக்கிக் கொள்ளவோ முடியும். தவிர, புகைப்படங்களை அனுப்புவதற்கு முன்னர், அதிலில் வரைதல்களை மேற்கொள்ள முடியும். இது தவிர, 25 விதமான sticker தொகுதிகளும் இதில் காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவை தவிர, Google Alloவில் Google Assistantஇன் முன்னோட்ட பதிப்பும் அறிமுகமாகிறது. Google Assistant மூலம் கூகுளுடன் கலந்துரையாடல்களை நீங்கள் மேற்கொள்ள முடியும். இதில், நீங்கள் கேள்விகளைக் கேட்க முடியும் என்பதுடன், உங்களது கலந்துரையாடல்களிடையே பதில்களைப் பெறமுடியும்.

முகவரி ஒன்றை தேடுவதற்கோ, உங்களுக்கு விருப்பமான யூடியூப் காணொளியைப் பகிருவதற்கோ, இரவு உணவருந்த வேண்டிய இடத்தை தேடுவதற்கு, இனிமேல் கலந்துரையாடல்களை விட்டு வெளியேறவேண்டியதில்லை. @google என தட்டச்சு செய்வதன் மூலம் Google Assistantஐ, எந்தவொரு குழுக் கலந்துரையாடல்களை கொண்டுவரமுடியும். இது தவிர, நீங்கள் தனித்தும் Google Assistantஐ Google Alloவில் பெறமுடியும்.

மக்களுடைய நாளாந்த வாழ்க்கைக்கு வருடக்கணக்காக உதவிவரும் கூகுளின் அடுத்த படைப்பே Google Assistant என்பதுடன், எதிர்வரும் மாதங்களில், மேலும் பல கூகுள் தயாரிப்புகளில் Google Assistant வரவுள்ளது.

Google கலந்துரையாடல்களில் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கலந்துரையாடல்களும் Transport Layer Security போன்ற நியம தொழில்நுட்பத்தை பயன்படுத்தி encrypt செய்யப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக, Incognito என்ற நிலையைப் பயன்படுத்துவதன் மூலம், தகவல்கள் காலாவதியாதல் போன்ற மேலதிக பாதுகாப்புக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை, Google Alloவைப் பயன்படுத்தாத நண்பர்களுக்கு குறுந்தகவல் மூலம் Google Alloவிலிருந்து தகவல்களைப் பரிமாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .