2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கார் ஹக்கினையடுத்து மென்பொருளை இற்றைப்படுத்தியது டெஸ்லா

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்லாவின் மின் கார்களின் இயங்குதளத்தை, சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஹக் செய்ததைத் தொடர்ந்து, தனது மென்பொருளை டெஸ்லா இற்றைப்படுத்தியுள்ளது.

டெஸ்லா மின் காரொன்று சென்று கொண்டிருக்கும்போது, 19 கிலோமீற்றர் தொலைவிலிருந்து, குறித்த டெஸ்லா மின் காரின் தடுப்பி அமைப்பினை, கீன் பாதுகாப்பு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த அனியொன்று, வெளியிலிருந்து கையாண்டிருந்தது. தவிர, மடிக்கணினியொன்றைப் பயன்படுத்தி, குறித்த டெஸ்லா மின் காரின் திறப்பு இல்லாமலே, குறித்த டெஸ்லா மின் காரின் கதவொன்றை ஹக்கர்கள் திறந்திருந்தனர்.

கீன் பாதுகாப்பு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த அணியொன்றினால், மாதக்கணக்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியினைத் தொடர்ந்தே ஹக் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விடயங்களை, காணொளி ஒன்றின் மூலமாக கடந்த திங்கட்கிழமை (19) வெளியிட்டிருந்தனர்.

குறித்த சோதனையின்போது, யாரோ ஒருவர் சுக்கானுக்கு பின்னால் இருக்கும்போது, பயணிகள் ஆசனத்தில் இருந்து கொண்டு, ஹக்கர், வாகனத்தை கட்டுப்பாட்டில் எடுத்திருந்ததுடன், சாரதி பாதையினை மாற்றிக் கொண்டிருக்கும் போது, மடிக்கணினியைப் பயன்படுத்தி, பின்னால் வரும் வாகனங்களை பார்க்கும் கண்ணாடியை அசைத்திருந்ததுடன், கார் சென்றுகொண்டிருக்கும்போதே, வெளியிலிருந்து, கார்களில் பொருட்கள் வைக்கும் பகுதியை ஹக்கர் திறந்திருந்தார்.

இந்நிலையிலேயே, தனது கார்களை வேறு எவரும் கையாள்வதை தடுக்கும் வகையில், தனது மென்பொருளை டெஸ்லா இற்றைப்படுத்தியுள்ளது. டெஸ்லாவின் கார்கள், இணையம் மூலம் இற்றைப்படுத்தல்களை பெற முடியும் என்ற நிலையில், முகவர் நிலையமொன்றுக்கு சாரதிகள் செல்லாமலே, டெஸ்லாவின் பொறியியலாளர்கள் இலகுவாக வழுவை திருத்திக் கொள்ள முடிகின்ற அனுகூலத்தை டெஸ்லா கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .