2024 மே 04, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 23

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1529: ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான், வியட்னா மீது படையெடுத்தான்.

1641: ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுடன்: தி மேர்ச்சண்ட் ரோயல் என்ற கப்பல் மூழ்கியது.

1799: இலங்கையில், அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மதச் சுதந்திரம் அமுலுக்கு வந்தது.

1821: திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கியதில், 30,000 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

1846: நெப்டியூன் கோள், பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1868: புவெர்ட்டோ ரிக்கோவில், ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.

1884: ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1889: நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1932: ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவூதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.

1941: நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.

1965: இந்திய - பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966: நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1980: பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

1983: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.

1986: கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை, பொதுமக்கள் பார்வைக்காகத்  திறந்துவைக்கப்பட்டது.

2002: மோஸிலா பயர் பொக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

2004: ஹெயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .