2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதன்நிலை நிறுவனமாக JAT ஹோல்டிங்ஸ் தெரிவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதைக் கவரும் உற்பத்தி வகைகளை சந்தைப்படுத்துவதன் மூலம், இலங்கையின் அமைப்பாக்க வசதி மற்றும் முடிவாக்க துறைசார் சந்தையில் முன்னணியில் திகழ்கின்ற JAT ஹோல்டிங்ஸ் தெரிவு ஹோல்டிங்ஸ் (JAT Holdings) நிறுவனமானது அண்மையில் இடம்பெற்ற இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனத்தின் (CNCI) விருது வழங்கல் நிகழ்வில் மதிப்புமிக்க இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையில் முதன்னிலையில் உள்ள 10 உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளமைக்கான ஒரு விருதும் இதில் உள்ளடங்குகின்றது.   இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் மரப் பூச்சு சார்ந்த துறையில் முன்னோடி நிறுவனமாக முக்கிய இடத்தை வகித்துவரும் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம், அண்மையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனத்தின் (CNCI) இவ் விருது வழங்கலில் உற்பத்தியாக்கல் பிரிவின் கீழ் சிறப்பு (மெரிட்) விருது ஒன்றையும் தட்டிச் சென்றது.   

“இந்த இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொள்கின்றமையானது எமது நிறுவனத்தை வளர்த்தெடுப்பதற்காக தம்மாலான முன்முயற்சிகள் மற்றும் கடின உழைப்பை மேற்கொண்ட அதேநேரம் தமது நேரத்தையும் கம்பனிக்காக செலவழித்த ஒட்டுமொத்த JAT நிறுவன அணியினருக்கும் மிகவும் மனநிறைவை தருவதாக அமைகின்றது. நாட்டிலுள்ள முன்னணி கைத்தொழில்கள் சம்மேளனத்திடம் இருந்து இவ்விருதுகளை பெற்றுக் கொள்கின்றமை, ஒரு கைத்தொழில் நிறுவனம் என்ற வகையில் உற்பத்தியாக்கல் துறையில் எமது சாதனைகளுக்காக கிடைக்கும் ஒரு தேசிய அங்கிகாரத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அமைகின்றது. மேலும் சிறந்த உயரங்களை சென்றடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இவ் விருதுகள் எமக்கு மேலும் ஊக்கத்தை அளித்திருக்கின்றன’ என்று JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஈலியன் குணவர்தன தெரிவித்தார்.   

JAT நிறுவனமானது புதியதொரு ‘ஒன்றிணைந்த வர்த்தக குறியீட்டை உருவமைப்பு’ செய்திருக்கின்றது. நிறுவனத்தின் தொழிற்பாட்டுப் பிரிகள், தொழிற்பாட்டு பிரிவுகளுக்குள்ளேயும் வியாபாரங்களுக்கு இடையிலும் காணப்படுகின்ற குறுக்கு-விற்பனைcross-selling வாய்ப்புக்கள் போன்றவற்றை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதாக இவ் ஒன்றிணைந்த வர்த்தக குறியீடு காணப்படுகின்றது.

நிறுவனத்தின் பரந்துபட்ட சேவை பிரிவுகளுள் - வியாபார செயன்முறை முகாமைத்துவம், வடிவமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாண திட்டமிடல் தீர்வுகள் உள்ளடங்கலாக ரியல் எஸ்டேட் அபிவிருத்தி துறையில் பரந்தளவிலான சேவைகளை வழங்கி வருகின்ற JAT Living அலுவலகம், வீடு மற்றும் சமையலறை ஆகியவற்றுக்கு புத்தாக்கமான அமைப்பாக்க (Furnishing பொருட்கள் மற்றும் துணையுற்பத்திகளை வழங்குகின்ற J AT Furnishing மற்றும், மரங்களுக்கான மேற்பூச்சுக்கள், வர்ணப்பூச்சுக்கள், வர்ணம்பூசும் உபகரணம் ஆகிவற்றை வழங்குகின்ற அதேவேளை வர்ணம்பூசும் தூரிகைகள், மக்கு வகைகள் (Putties),  மென்சாந்துக் கலவை (Plasters)  மணற்தாள் வகைகள் Sandpapers) , மற்றும் கூரை அமைத்தல், தரை அமைத்தலுக்கு அவசியமான உற்பத்திகளை விநியோகம் செய்யும் JAT Paints  ஆகியவை உள்ளடங்குகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .