Princiya Dixci / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது.
அங்கு செய்திகளை சேகரிப்பதற்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை மயானத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. இதனால், கம்பிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், கனத்தை மாயனத்துக்குள் ட்ரோன் கமெரா சுற்றிதிரிந்தமையால், பொலிஸார் கலவரம் அடைந்தனர். வானிலிருந்து படம்பிடித்த அந்தக் கமெராவைப் பிடிப்பதற்குப் பொலிஸாரினால் முடியவில்லை.
எனினும், கனத்தை மயானத்தின் பாதுகாப்பு வேலிகளுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கிப் பொலிஸார் ஓடிவந்தபோதிலும், ட்ரோன் கமெராவின் உரிமையாளரைப் பொலிஸாரினால் தேடிப்பிடிக்கமுடியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .