2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நைஜீரியாவில் போகோ ஹராம் தாக்குதல்கள்: 8 படைவீரர்கள் பலி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு நைஜீரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், குறைந்தது எட்டுப் படைவீரர்களை போகோ ஹராம் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ள நைஜீரிய இராணுவம், இரண்டு டசினுக்கும் அதிகமான ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மைடுகுரிக்கு 70 கிலோமீற்றர் தென்கிழக்காகவுள்ள பாமா என்ற இடத்துக்கு அருகே, தொடரணியொன்றை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) போகோ ஹராம் தாக்கியதில், இராணுவ அதிகாரியொருவரும், படைவீரர்கள் மூவரும், தாக்குதலாளிகள் மூவரும் கொல்லப்பட்டதாக, இராணுவத்தின் அறிக்கையொன்றில் திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளது.

இதேவேளை, மைடுகுரி நகரத்துக்கு 110 கிலோமீற்றர் வடகிழக்காகவுள்ள லொகோமனியிலுள்ள இராணுவ நிலையொன்றை ஆயுததாரிகள் தாக்கியதில், படைவீரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதாக, மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கு இடம்பெற்ற மோதலில், குறைந்தது, ஆயுததாரிகள் 22 பேர் இறந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்குறித்த தாக்குதல்களோடு சேர்த்து, கடந்த வாரத்தில் கொல்லப்பட்ட துருப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 10ஆக உயர்ந்ததுடன், காயமடைந்தோரின் எண்ணிக்கை 24 ஆகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .