2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென் மாகாண சபையில் சி.விக்கு எதிர்ப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உரையானது இனவாத உரையென்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி, தென் மாகாண

சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென் மாகாண சபையின் மாதாந்த அமர்வு கே.ஏ. சோமவன்ச தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை கூடியது. அதன் பின்னர் உறுப்பினர் சமிலி விதானாச்சியினால் கண்ட யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு, அச்சபையில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஜனநாயகக் கட்சிஆகிவற்றின் உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .