2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'சிறந்த தீர்வுக்கான யோசனைத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியையும் மாகாணங்களுக்கான பொலிஸ், காணி அதிகாரங்களையும் அரசாங்கம் முன்வைக்குமாயின் இதனால் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆராய்ந்து சிறந்த தீர்வுக்கான யோசனைத் திட்டமொன்றை முஸ்லிம்கள் முன்வைக்க வேண்டியது அவசியமாகும்  என தேசிய முஸ்லிம் சமத்துவ சம்மேளனத்தின் தலைவர் வைத்திய அதிகாரி வை.எல்.எஸ். யூசுப் தெரிவித்தார்.

தேசிய முஸ்லிம் சமத்துவ சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம் அட்டாளைச்சேனை மீலாத் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு (27) நடைபெற்றறு. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'தற்போது கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்த யாப்பில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஆபத்தை அறியாதவர்களாக, விளங்கிக் கொள்ளாதவர்களாக அரசியல் தலைமைகள் இருந்து கொண்டிருப்பது சமூகத்திற்கு பெரும் ஆபாத்தான நிலமையாகும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினையாக நிலப்பிரச்சினை காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 40 வீதமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு 03 வீதமான நிலமே உள்ளது. கடந்தகால யுத்தம், பயங்கரவாதம் காரணமாக முஸ்லிம்களின் 80,000 ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டுள்ளன.

தற்போது அரசியல் யாப்பு மாற்றம், வடக்கு, கிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கான பொலிஸ்., காணி அதிகாரம் வழங்குதல் மற்றும் சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டம் பற்றி தமிழ் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்ளானால் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதுவும் பேசாமல் நடப்பவை நடக்கட்டும் என்ற எண்ணப்பாங்கில் இருந்து கொண்டுவருகின்றனர்.

அரசியல் சீர்திருத்த யாப்பு மற்றும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் மக்களிடம் கொண்டு சென்று விளக்குவதற்கான முiறாயானதொரு அமைப்பு முஸ்லிம் சமூகத்திற்கு தேவையாக உள்ளது. அதற்கான அவசியம் உணரப்பட்டு தேசிய முஸ்லிம் சமத்துவ சம்மேளனம் அமையப்பெற்றுள்ளது. இதனை ஜனநாயக முறையில் மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்வதுடன் அரசியல் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக சமூகத்திற்கான பணியை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும்' என்றார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .