Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரில், கடந்த சனிக்கிழமை (01) இடம்பெற்ற போட்டியில், லிவர்பூல், செல்சி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதுடன், வெஸ்ட் ப்ரோம், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் வட்போர்ட், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் வெஸ்ட் ஹாம், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.
லிவர்பூல், சுவான்சீ அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றிருந்தது. முதற்பாதியின் முடிவில் ஒரு கோல் பின்தங்கியிருந்த லிவர்பூல், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், ரொபேர்ட்டோ பெர்மின்ஹோ பெற்ற கோலினால் கோல் எண்ணிக்கையைச் சமநிலை செய்ததுடன், இறுதி நேரத்தில் ஜேம்ஸ் மில்னர் பெற்ற கோலின் மூலம் போட்டியை வென்றது.
செல்சி, ஹள் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது. போட்டியின் இரண்டாவது பாதியில், டியகோ கொஸ்டாவிடமிருந்து பந்தைப் பெற்ற வில்லியன் முதலாவது கோலைப் பெற்றதுடன், நெமஞ்சா மட்டிக்கிடமிருந்து பந்தைப் பெற்ற கொஸ்டா, இரண்டாவது கோலினைப் பெற்று, செல்சியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஏனைய ஓட்டங்களில், சந்தர்லேண்ட், வெஸ்ட் ப்ரோம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், வட்போர்ட், போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன், மிடில்ஸ்பேர்க், வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .