Princiya Dixci / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு நிமிடத்தில் 20 இரும்புக் கம்பிகளை வாயினால் வளைத்து, கொழும்புத் துறைமுகக் கொள்கலன் தளத்தின் தொழில் புரியும் ஜனக காஞ்சன எனும் 24 வயதுடைய இளைஞன், இன்று வியாழக்கிழமை (06) உலக சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டுத்துறை வைத்தியர்கள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் முன்னிலையில் மோதரை - முகத்துவாரத் துறைமுகப் பயிற்சி நிலையத்தில் வைத்து இவர் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ரஷ்யா நாட்டு விளையாட்டு வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 12 இரும்புக் கம்பிகளை வாயினால் உடைத்திருந்தமையே இதற்கு முன்னர் உலக சாதனையாக இருந்ததை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .