Princiya Dixci / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த முதலாம் திகதியன்று மாரடைப்பு காரணமாக உயிரழந்த வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் உடலம், நேற்று வியாழக்கிழமை (06), உண்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, பொது மக்களின் அஞ்சலிக்காக, கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் (முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) வைக்கப்பட்ட அவரது உடலத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்களென ஆயிரக்கணக்கானோர், அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .