Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 08 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் குழு “பி” சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில், நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான குறித்த போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில், சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கி நான்காவது நிமிடத்திலேயே, விண்மீன் விளையாட்டுக் கழகத்தின் உதயராஜ் பெற்ற கோலின் மூலமாக அவ்வணி முன்னிலை பெற்றது. பின்னர், 33ஆவது நிமிடத்தில், சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் யூட் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.
தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில், 76ஆவது நிமிடத்தில், சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதி பெற்ற கோலுடன் அவ்வணி முன்னிலை பெற்றதுடன், 87ஆவது நிமிடத்தில் ஜான்சன் பெற்ற கோலுடன், தனது வெற்றியை உறுதிப்படுத்தி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாயகனாக, சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதி தெரிவு செய்யப்பட்டதுடன், அவருக்கான பதக்கத்தினை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.மீடின் அணுவித்ததுடன், வெற்றி பெற்ற சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கான பணப்பரிசினை, யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் சண்முகம் வழங்கினார்.
இதேவேளை, பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மன்னார் சென்.லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே, கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்ற குழு “A” சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில், சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .