2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

உலக சாதனை படைத்தார் பென்தெக்கி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்று ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையை, பெல்ஜியம் அணியின் கிறிஸ்டியான் பென்தெக்கி படைத்துள்ளார். ஜிப்ரால்டர் அணிக்கெதிராக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போட்டியிலேயே, இச்சாதனையை அவர் படைத்தார்.

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியாக அமைந்த இப்போட்டியில், போட்டி ஆரம்பித்து 8.1 செக்கன்களில், தனது கோலை, பென்தெக்கி பெற்றுக் கொண்டார். இது, இதற்கு முன்னர் காணப்பட்ட சாதனையான 8.3 செக்கன்களை முறிடித்தது. அந்தச் சாதனையை, 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண் பொட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக சான் மரினோவின் டேவிட் குவால்டியாரி பெற்றிருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்கதாக, பெல்ஜியத்துக்கும் ஜிப்ரால்டர் அணிக்குமிடையிலான போட்டியில், பந்தைக் கட்டுப்பாட்டுள் வைத்து, மத்திய பகுதியில் போட்டியை, ஜிப்ரால்டர் அணியே ஆரம்பித்திருந்தது. எனவே, பென்தெக்கியின் சாதனை, இன்னமும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X