2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் காலமானார்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 13 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் மன்னர் பூமிபொல் அட்டுலியடேஜ், தனது 88ஆவது வயதில், இன்று வியாழக்கிழமை (13) காலமானார் என, தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அரச மாளிகையின் அறிவிப்புத் தெரிவித்தது.

உலகில் அதிக காலம் அரச பொறுப்பில் காணப்பட்டவர் என்ற பெருமையைக் கொண்ட மன்னர், தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 18ஆவது வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார்.

மன்னர் பூமிபொலின் 64 வயதான மகன், மகா வஜிரலோங்கொன், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .