George / 2016 ஒக்டோபர் 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று தெரியவந்துள்ளதுடன், இலங்கை இராணுவத்தால் தான் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி தப்பிவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கி உள்ளதாகவும் அதனால், தான் இந்தியா வந்ததாக அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .