Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியின் தலைவராக றிக்கி பொன்டிங் இருந்த போது, அவருக்குப் பொருத்தமான உப தலைவராக தான் இருந்திருக்கவில்லை என, மைக்கல் கிளார்க் ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது புதிய சுயசரிதைப் புத்தகத்திலேயே, அவர் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு, தனது சுயசரியை வெளியிட்ட றிக்கி பொன்டிங், தனது உப தலைவராக இருந்த மைக்கல் கிளார்க்குடன் காணப்பட்ட தடுமாற்ற உறவை விவரித்திருந்தார்.
இந்நிலையிலேயே, தனது சுயசரிதைப் புத்தகத்திலும் அது குறித்து, மைக்கல் கிளார்க் எழுதியுள்ளார். "உப தலைவராக என் மீது, சில விடயங்களில் ஏமாற்றமடைந்ததாக, அவரது சுயசரிதைப் புத்தகத்தில் றிக்கி எழுதியுள்ளார். விசுவாசம் அற்றவர் என்றோ அல்லத குழப்பம் விளைவிப்பவர் என்றோ அவர் குற்றஞ்சாட்டவில்லை. மாறாக, திட்டமிடல் கூட்டங்களிலோ அல்லது நாளாந்தக் கூட்டங்களிலோ ஈடுபடுவதற்கோ அல்லது தலைமைத்துவப் பணியை ஏற்பதற்கோ நான் தயங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் குழப்பங்கள் காணப்படும் போது, நான் தனிமைப்படுவேன் என்று அவர் குறிப்பிட்டார். அவர் சரியாகத் தெரிவித்தார். அவருக்கான சிறந்த உப தலைவராக, நான் இருக்கவில்லை" என்று கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தனது மிகப்பெரிய தூண்டுதல்களாக தனது தந்தை, மார்க் டெய்லர், ஷேன் வோண் ஆகியோரைக் குறிப்பிட்ட கிளார்க், பொன்டிங்கின் உப தலைவராக, தன்னால் அவர் பின்னால் இணைந்து கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். அத்தோடு, அடம் கில்கிறிஸ்ட், பிரட் ஹடின் ஆகியோர், சிறந்த உப தலைவர்களாக இருந்தனர் என நம்புவதாகவும் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .