2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நேஷன்ஸ் Kidz சேமிப்புக் கணக்கு மீளறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேஷன்ஸ் Kidz சேமிப்புக் கணக்கை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மீளறிமுகம் செய்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் இளம் வயது முதல் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதை நோக்காக் கொண்டும் அவர்களின் எதிர்காலத்துக்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் இந்தக் கணக்கை அவ்வங்கி மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கிளைகளுக்கான தலைமை அதிகாரி ஷிஹான் டேனியல் கருத்துத் தெரிவிக்கையில், “வேகமாக வளர்ந்து வரும் வங்கி எனும் வகையில், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவோம் அவர்களின் கனவுகளை நிறைவேற்றி உதவிகளை வழங்குவது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நிதி மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.

பல இலங்கையர்களுக்கு,ஒ தமது பிள்ளைகளுக்கு, பொருத்தமான உயர் கல்வியைப் பெற்றுக்கொடுப்பது என்பது கடினமான காரியமாக அமைந்துள்ளது. சேமிப்புப் பழக்கங்களுடன், கல்விசார் அனுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பது என்பது, குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோருக்கு பரிபூரண தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.  

எதிர்காலச் செயற்பாடுகளில் தகவல் தொழில்நுட்பம் என்பது முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ள நிலையில், நேஷன்ஸ் Kidz சேமிப்புக்கணக்கு வைத்திருப்போருக்கு தகவல் தொழில்நுட்ப புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படும். டேனியல் தொடர்ந்து விவரிக்கையில், “அடுத்த தலைமுறைக்கு தகவல் தொழில்நுட்பம் எந்தளவுக்கு முக்கியமானது என்பதைக் கவனத்தில் கொண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மாணவர்களுக்கு, விசேட தகவல் தொழில்நுட்ப புலமைப்பரிசில் ஒன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டுள்ளது. நாளைய உலகில் எழும் சவால்களை இளைஞர்கள் எதிர்நோக்க உதவும் வகையில் இந் நிகழ்ச்சி அமைந்திருக்கும்” என்றார்.  

மேலும், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்குத் தமது கல்வியறிவை மேம்படுத்திக் கொள்வதுக்கும், பரீட்சை தொடர்பான அடிப்படை விடயங்களை அறிந்து கொள்வதுக்கும் உதவும் வகையில் விசேட பயிற்சிப் பட்டறைகளையும் வங்கி ஏற்பாடு செய்யவுள்ளது. மேலும், நேஷன்ஸ் ட்ரஸ்ட் Kidz சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, கவர்ச்சிகரமான பரிசுகளையும் வழங்க முன்வந்துள்ளது. இதில் ரிமோட் கொன்ரோலினால் இயங்கும் ஹெலிகொப்டர்கள், Learn மற்றும் Touch Pads மற்றும் மவுன்டன் சைக்கிள்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .