2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’

George   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட்டில் இருந்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திரும்பிய பிரபுதேவா, மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இயக்குநர் பிரபுதேவா, என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது இளையதளபதியின் “போக்கிரி”தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரபுதேவா, மீண்டும் தமிழில் திரைப்படம் இயக்கினால் விஜய்தான் ஹீரோ என கோலிவூட்டில் கூறப்பட்டது.   

ஆனால், திடீர் திருப்பமாக பிரபுதேவா, இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் விஷாலும் கார்த்தியும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ், தயாரிக்கவுள்ளதாகவும் இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   

இந்த திரைப்படத்துக்கு “கறுப்பு ராஜா வெள்ளை ராஜா” என்ற தலைப்பு வைத்திருப்பதாகவும், இந்த திரைப்படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .