2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெனிசுவேலா ஜனாதிபதிக்கெதிரான வாக்கெடுப்பு நகர்வு இடைநிறுத்தம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான சர்வஜன வாக்கெடுப்பு பிரசாரத்தை, வெனிசுவேலாவிலுள்ள தேர்தல் அதிகாரிகள், இடைநிறுத்தியுள்ளனர். ஜனாதிபதியை அகற்றுவதற்கான, எதிரணியின் முனைப்புகளுக்கு, குறித்த நகர்வு, மேலும் சவாலை வழங்கவுள்ளது.

மோசடிக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மதுரோவுக்கெதிரான கையெழுத்து வேட்டை முடிவுகளை, சில பிராந்திய நீதிமன்றங்கள், செயலற்றதாக்கியமையத் தொடர்ந்தே, தேர்தல் சபையின் மேற்கூறப்பட்ட முடிவு, நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருந்தது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை கருத்துத் தெரிவித்த, முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹென்றிகே கப்ரிலஸ், தானும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏழு பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .