2024 மே 02, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் நான்கு விருதுகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 தெற்காசிப் பங்குடைமை உச்சி மாநாடு மற்றும் வர்த்தக விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த தனியார் பிரிவு வங்கி என்ற விருது உட்பட நான்கு விருதுகளைக் கொமர்ஷல் வங்கி வென்றுள்ளது. ஆசிய வர்த்தகக் கூட்டமைப்பின் அங்கிகாரத்தோடு உலக HRD மாநாடு இந்த விருதுகளை வழங்கியுள்ளது.   

இந்த வைபவத்தில் ஆகக் கூடுதலான விருதுகளை வென்ற வங்கி கொமர்ஷல் வங்கியாகும். சிறந்த தனியார் பிரிவு வங்கி என்ற விருதுக்கு மேலதிகமாக சிறந்த CSR செயற்பாடுகள், வர்த்தக முத்திரை, காப்புறுதிச் சேவை மற்றும் நிதிச் சேவைகளில் சிறப்பு, சிறந்த நிலைத்தன்மைக் கொண்ட வங்கி என்பன வங்கிக்கு கிடைத்துள்ள ஏனைய விருதுகளாகும்.தெற்காசிய நாடுகள் பலவற்றைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சிரேஷ்ட கூட்டாண்மைப் பிரிவுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.   

பிராந்திய நாடுகளின் தலைவர்கள் புடை சூழ தெற்காசிய வர்த்தக விருது கௌரவம் என்பது வலிமை, ஐக்கியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றுக்கான ஒரு வாய்ப்பாக அமையும். தெற்காசியப் பங்குடைமை மாநாட்டின் நோக்கம் தர அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான உறுதியானதோர் அடித்தளத்தை அமைப்பதாகும். மேலும் தர ஆற்றலை மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாகவுள்ளத் தனிநபர்களையும் நிறுவனங்களையும் கௌரவிப்பதும் இதன் நோக்கமாகும்.   

இந்த விருதுகள் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் “நாம் செய்யும் எல்லா பணிகளிலும் மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவது தான் எப்போதும் எமது நோக்கமாகும். எமது முயற்சிகளுக்கான அங்கிகாரம் எப்போதும் எமக்கு கிடைக்கின்றமையும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

எமது மூலோபாய வர்த்தக முயற்சிகளைக் கட்டியெழுப்பும் முயற்சி மற்றும் எமது நிலையான வர்த்தக முயற்சிச் செயற்பாடுகளில் நாம் காட்டும் அர்ப்பணிப்பு என்பனவற்றில் நாம் பெருமை அடைகின்றோம். சர்வதேச மற்றும் உள்ளூர் விருதுகளை வழங்கும் அமைப்புக்கள் எப்போதும் இவற்றுக்கு உரிய அங்கிகாரத்தை வழங்கி வந்துள்ளன” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .