2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

GenX Nano Automatic இலங்கையில் அறிமுகம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்தும் புத்தம்புதிய GenX Nano வாகன உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளமை தொடர்பில் Tata Motors அறிவித்துள்ளது. தற்போதைய நவநாகரிகத்துடன், இளமை பொங்கும் வகையில் உறுதியான வடிவமைப்பு மற்றும் ஆடம்பரத்தை விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப மேன்மைமிக்க hatchback வடிவில் வெளிவந்துள்ளது.

இப்புதிய GenX Nano வாகனங்கள் அதன் பெறுமானத்தை அதிகரிக்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளதுடன், நகரப் பாவனைக்கு மிகவும் உகந்த மோட்டார் வாகனமாக அதனை மாற்றியமைத்துள்ளது. “GenX Nano Automatic” நாடெங்கிலும் உள்ள 30 இற்கும் மேற்பட்ட DIMO காட்சியறைகள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. GenX Nano Automatik இன் XTA  வடிவமானது ரூ.1,975,000 என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றது.  

GenX Nano வாகனங்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய Tata Motors நிறுவனத்தின் பிரயாணத் தேவை வாகனங்களுக்கான சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரியான ஜொனி உம்மன் கூறுகையில், “Nano தனது புத்தாக்கம் மற்றும் பொருளாதாரரீதியாக மேம்பட்ட பொறியியல் வடிவமைப்புகளை  அறிமுகப்படுத்தி அதன் மூலமாக உலக மோட்டார் வாகனத் துறை வரைபடத்தில் இந்தியாவின் பெயரைப் பொறித்துள்ளது.

பிரயாணத் தேவைகளுக்கான எமது உற்பத்தி வரிசையில் அது தொடர்ந்தும் மிக முக்கியமான ஒரு வர்த்தக நாமமாகத் திகழ்வதுடன், Power Steering, the Hatch access, Bluetooth connectivity போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் நகரப் பாவனைக்கான மிகச் சிறந்த ஒரு வாகனமாக மாற்றியமைப்பதற்கு நாம் தொடர்ந்தும் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்து வருகின்றோம்.

இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Nano உற்பத்தி வடிவங்கள் இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது GenX Nano வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மிடுக்கான, ஆடம்பரமான, திறன்மிக்க மற்றும் நகரப் பாவனைக்கு நடைமுறைரீதியாகச் சிறந்த ஒரு மோட்டார் வாகனத்தை நாம் வழங்கியுள்ளதுடன், கச்சிதமான hatch வடிவமைப்பு பிரிவில் இதற்கு உறுதியான வளர்ச்சி வாய்ப்புக்கள் உள்ளன.   

அறிமுகப்படுத்தும் நிகழ்வில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே உரையாற்றுகையில், “TATA GenX NANO Automatic வாகனங்கள், ஆடம்பர, கச்சிதமான சிறிய மோட்டார் கார் வாகனங்களாக, அதற்கு ஈடாக எவ்விதமான போட்டியுமின்றிய ஒரு சந்தையைத் தோற்றுவிக்கவுள்ளதுடன், அது இலங்கையில் பிரயாணிகளின் போக்குவரத்தில் ஒரு மாற்றத்துக்கு வித்திடும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .