2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் 2,400 அகதிகள் மீட்பு

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிக் கரையோரப் பகுதியில், படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளில் 2,400 பேர், நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று, பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, இத்தாலியக் கரையோரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 2,400க்கும் மேலதிகமாக, 14 சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த அகதிகள், இறப்பர் படகுகளிலும் ஏனைய சிறிய அளவிலான படகுகளிலும் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், சனிக்கிழமை மாத்திரம், சுமார் 20 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில், அயர்லாந்து கடற்படைக் கப்பல், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினதும் கடல் கண்காணிப்பு அமைப்பினதும் படகுகளும் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கையில், 12 சடலங்களை மீட்டதாக,எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புக் குறிப்பிட்டது. அவர்களில் நால்வர், சிறுவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாண்டில் மாத்திரம், படகு மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றவர்களில் குறைந்தது 3,100 அகதிகள், உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .