2024 மே 03, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், மிகவும் இறுக்கமான போட்டியில், சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 5ஆவது நாளான இன்று, 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 33 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, மேலதிகமாக 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, இறுதி 2 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அவ்வணிக்காகத் தனித்துப் போராடிய அறிமுக வீரர் சபீர் ரஹ்மான், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களுடன், மைதானத்தில் கவலையுடன் நின்ற காட்சி, அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இங்கிலாந்து அணிக்காக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியதோடல்லாமல், இன்று வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ், இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்...

இங்கிலாந்து 293/10 (துடுப்பாட்டம்: மொய்ன் அலி 68, ஜொனி பெயர்ஸ்டோ 52, ஜோ றூட் 40, கிறிஸ் வோக்ஸ் 36. பந்துவீச்சு: மெஹெடி ஹஸன் மிராஸ் 6, ஷகிப் அல் ஹஸன் 2, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 248/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 78, முஷ்பிக்கூர் ரஹீம் 48, மகமதுல்லா 38, ஷகிப் அல் ஹஸன் 31. பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4, மொய்ன் அலி 3, அடில் றஷீட் 2 விக்.)

இங்கிலாந்து 240/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 85, ஜொனி பெயர்ஸ்டோ 47. பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 263/10 (துடுப்பாட்டம்: சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 64, இம்ருல் கைஸ் 43, முஷ்பிக்கூர் ரஹீம் 39. பந்துவீச்சு: கரித் பற்றி 3, பென் ஸ்டோக்ஸ் 2, மொய்ன் அலி 2, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2 விக்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .