2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புற்றுநோயை ஆரம்பத்திலேயே இனங்காணும் வசதி

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

4ஆவது Can-Sur- Vive பயிற்சிப்பட்டறை லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் ஒக்டோபர் 1ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது சன்டி போன்ற மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சமூகத்தில் ஆற்றும் பங்களிப்பு குறித்த விடயங்கள் பற்றி ஆராயப்பட்டிருந்தது.

Can-Sur- Vive நம்பிக்கை நிதியம் என்பது லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சியின் புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் நயோமால் பெரேராவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் சமூகப்பொறுப்புணர்வுச் செயற்றிட்டமாகும். இவர் ஒவ்வொரு காலாண்டிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் நலன் கருதி சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறார். இவ்வாறு உயிர் பிழைத்தவர்கள் பலருக்கு தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்கள் ஆலோசனைகள் போன்றன இந்த நிகழ்ச்சிகளினூடாக வழங்கப்படுவதே இதன் பிரதான நோக்கமாகும்.   

“நான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 4ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தது. இச்செய்தி என்னை பெரிதும் பாதித்திருந்தது. ஆனாலும், இன்று நானிருக்கும் நிலையைப் பாருங்கள். மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஏனெனில் Mammogram பரிசோதனையினூடாக ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை இனங்கண்டு கொள்ள முடியும், இதன் காரணமாக எனக்கு chemotherapy அல்லது radiation சிகிச்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிடவில்லை. இந்தப் பரிசோதனையில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பில் பெண்களுக்கு விளக்கமளிப்புகளை வழங்க நான் எதிர்பார்க்கிறேன்” என மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரான சந்தியா ஜயசூரிய தெரிவித்தார்.

பெண்களில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக அமைந்துள்ள மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்தவர்களில் சந்தியாவும் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த மற்றுமொரு நபரான ரொஷ்னி சில்வா தெரிவிக்கையில், “mammogram பரிசோதனையை மேற்கொள்ள பெண்கள் ஏன் தயக்கம் காண்பிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இது வலியை ஏற்படுத்தாது. 2009ஆம் ஆண்டு மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது இனங்காணப்பட்டதன் பின்னர் 6 தடவைகளுக்கு மேலாக நான் mammogram பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன்.

இந்தப் பரிசோதனை இருந்திராவிடின், எனக்கு ஏனைய புற்றுநோய் சிகிச்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும். ஆரம்பக் கட்டத்தில் புற்றுநோயை இனங்காண mammogram உதவியதால் இன்று நான் புற்றுநோயின்றிய நபகராக திகழ்கிறேன்”என்றார்.   லங்கா ஹொஸ்பிட்டலில் நவீன டிஜிட்டல் mammogram இயந்திரங்கள் காணப்படுகின்றன. இவை குறைந்தளவு அசௌகரியங்களையும், குறைந்தளவு கதிரியக்கங்களையும் கொண்டவை. இதில் நவீன தயாரிப்பாக Fujifilm, Amulet Innovality அமைந்துள்ளதுடன், ஆரம்பக் கட்டத்தில் மார்பகப் புற்றுநோயை இனங்காண்பதற்கு அதிகளவு திறன் கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன் மார்பு பயொப்சிகள் மற்றும் பகுதிப்பரவல் கண்டறிதல் சோதனைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .