2026 மார்ச் 11, புதன்கிழமை

பொலிஸ் காவலரணுக்கு தீ வைப்பு

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி டிப்போ சந்தி காவலரண் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், காவலரணின் சிறிய பகுதி தீயில் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ வைப்புச் சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இரும்பு கம்பிகள் கொண்ட அந்த காவலரண் தீயால் எவ்வித சேதமும் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காவலரணில் நின்றே, போக்குவரத்துப் பொலிஸார், டிப்போ சந்தியின் கடமை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .