2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ட்ரம்பைக் கலாய்க்கிறார் ஒபாமா

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பான பதற்றங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், ஜிம்மி கிமெல் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா, நகைச்சுவையுடன் டொனால்ட் ட்ரம்ப் மீது கேலிகளை முன்வைத்தார்.

இந்தத் தேர்தல், மோசடியானதாக இடம்பெறுகிறது என, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் நிலையில், அதைக் கேலி செய்யும் விதமாக, "தேர்தலை மோசடியாக மாற்றும் நடவடிக்கையிலிருந்து ஓய்வெடுத்து, இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார்" என, ஜிம்மி கிமெல் குறிப்பிட்டார்.

இதில், தன்னைக் கீழ்மைப்படுத்தும் டுவீட்கள் சிலவற்றை வாசித்த ஜனாதிபதி ஒபாமா, "ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் மோசமான ஜனாதிபதியாக, ஜனாதிபதி பராக் ஒபாமா வரலாற்றில் இடம்பிடிப்பார்" என்ற, ட்ரம்ப்பின் டுவீட்டை வாசித்தார். அதை வாசித்த அவர், "நானாவது, ஜனாதிபதி என்ற வகையில் வரலாற்றில் இடம்பிடிப்பேன்" என, ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டார்.

அவசரகால நிலைமைகளில், தனக்கான விசேட அவசரகால தொலைபேசிக்கு அழைப்புகள் வருமெனத் தெரிவித்த ஜனாதிபதி, 3 அல்லது 4 தடவைகள், அவ்வாறான அழைப்புகள் இரவு நேரத்தில் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால், "என்னைக் கேலி செய்யம் நபர்களைப் பற்றி நான், அதிகாலை 3 மணிக்கு, டுவீட் செய்வதில்லை" என்று தெரிவித்து, ட்ரம்ப்பின் டுவிட்டர் பழக்கத்தைக் கேலி செய்தார்.

ஜனாதிபதி ஒபாமாவின் 2ஆவது பதவிக் காலம், அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரால் 3ஆவது தடவையாகப் போட்டியிட முடியாது. எனினும், "மூன்றாவது பதவிக் காலத்துக்கு நான் போட்டியிட்டால், [எனது மனைவி] மிஷெல், என்னை விவாகரத்துச் செய்துவிடுவார்" என, ஜனாதிபதி ஒபாமா மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X