Princiya Dixci / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாபகத் தலைவரான ரோஹண விஜயவீரவின் மனைவியான சித்ராங்கனி விஜயவீர விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரோஹண விஜயவீர, இறுதியாக வசித்த, நாவலப்பிட்டி உலப்பனையில் உள்ள வீடு மற்றும் காணியை, தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறே, அவருடைய மனைவி கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை, கங்கஇஹல கோரலே பிரதேச சபையின் செயலாளர் மங்கள விக்கிரம ஆராய்ச்சி நிராகரித்துள்ளார்.
அந்த வீடும் காணியும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன எனவும் ஆகையால், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
விஜயவீர மறைந்ததன் பின்னர், தானும் தன்னுடைய பிள்ளைகளும், கடற்படை முகாமிலேயே தங்கியிருப்பதாகவும் அங்கிருந்து வெளியேறவிருப்பதனால், அவ்வீட்டையும் காணியையும் தங்களுக்கு வழங்குவதற்கு ஆவன செய்யுமாறும், அவருடைய மனைவி கோரியிருந்தார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே அவருடைய மனைவி, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
உலப்பனையில் உள்ள அந்த வீடானது, இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் பயிற்சி மத்திய நிலையமாக இருப்பதாகவும் அங்கு 1000க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கற்பதாகவும், இளைஞர் சேவைகள் மன்றமானது, அவ்வீட்டுக்கு அண்மையில் இருக்கின்ற தனியாருக்குச் சொந்தமான காணியையும் பெற்றும் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டுள்ளமையால் அந்த வீட்டையும் காணியையும் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் தோன்றியிருப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .